க-து:
பொருள் :மழை என்னும் சொல் வளியென்னும் சொல்லியல் பிற்றாய்அத்துச் சாரியையும் இன்சாரியையும் பெறும்.
எ. டு:மழையத்துக் கொண்டான், மழையிற் கொண்டான், சென்றான்,தந்தான், போயினான் எனவரும். வருமொழி வரையாது கூறினமையின்மழையத்து ஞான்றான், வந்தான், அடைந்தான் என இயல்புகணத்தொடுவருதலும் கொள்க.
“திங்களை முற்கூறிய முறையன்றிக் கூற்றினான்’’ எனமிகை கொண்டுநச்சினார்க்கினியர் கூறும் சில சொல்முடிபுகள் ஈண்டைக்கு ஏற்பன அல்ல.அவற்றுள் பல பொதுவிதியுள் அடங்கும். சில புறனடையாற் கொள்ளத் தக்கவையாம்.