சூ. 289 :ஓகார இறுதி ஏகார இயற்றே(87)
 

க-து :

ஓகார ஈற்று அல்வழிப்புணர்ச்சி ஆமாறு கூறுகின்றது.
 

பொருள் :ஓகார  இறுதியாகிய  பெயர்கள்  அல்வழிக்கண் கசதபக்கள்
வரின் ஏகார ஈற்று இயல்பிற்றாகும்.
 

எ. டு:ஓக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். (ஓ-மதகு நீர்த்தாங்கும்
பலகை)