சூ. 290 :

மாறுகொள் எச்சமும் வினாவும் ஐயமும் 

கூறிய வல்லெழுத் தியற்கை யாகும் 

(88)
 

க-து : 

ஓகாரஈற்று இடைச் சொல் சிலவற்றிற்கு எய்தியது விலக்குகின்றது.
 

பொருள் :எதிர்மறைப்  பொருளை   எச்சமாகக்   கொள்ள  நிற்கும்
ஓகாரமும்  வினாப்பொருள்பட  நிற்கும்  ஓகாரமும்  ஐயப்பொருள்  தந்து
நிற்கும் ஓகாரமும் வல்லெழுத்துமிகாமல் இயல்பாகும்.
 

எ.டு :யானோ  கொண்டேன்?,  சென்றேன்,  தந்தேன்,  போயினேன்
எனவும்;  நீயோ  கொண்டாய்?,  சென்றாய், தந்தாய், போயினாய் எனவும்;
காடோ, கடறோ, புற்றோ, புதரோ எனவும் வரும்.