சூ. 291 : | ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற் றியற்றே | (89) |
|
க-து: | ஒழியிசை ஓகாரத்திற்கு மேற்கூறிய விதி பொருந்துமென்கின்றது. |
|
பொருள்:ஒழியிசை ஓகாரத்தின் நிலையும் மேல்மொழிந்தவற்றின் இயல்பிற்றாய்க் கசதபக்கள்வரின் மிகாது இயல்பாகும். |
எ.டு:கொளலோ கொண்டான், செலலோ சென்றான் எனவரும். கொண்டுய்யப் போயினானல்லன் என்பது பொருள். |
இனித், தன்னின முடித்தல் என்னும் உத்தியான், பிரிநிலையாயும் தெரிநிலையாயும், சிறப்பாயும், எண்ணுநிலையாயும் வரும் ஓகாரமும் இயல்பாதல் கொள்க. |
எ. டு:யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே எனவும் நன்றோ தீதோ அவர் கண்டது எனவும் ஓஒ கொண்டான் எனவும் (சிறப்பின் ஓ ஆதலின் ஒகரம் தோன்றிற்று) குன்றுறழ்ந்த களிறென்கோ, கொய்யுளைய மாவென்கோ எனவும் வரும். ஈற்றசை ஓகாரத்திற்கும் இஃதொக்கும். |