சூ. 293 :இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும்(91)
 

க-து:

கோ  என்னும் சொல் இல்என்பதனொடு  புணர்தற்கண்  எய்தும்
சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் :கோ  என்னும்  ஓகார  ஈற்றுச்  சொல்லை ‘இல்’ என்னும்
சொல்லொடு  கூட்டிச்  சொல்லின் ஒகரந் தோன்றாது இயல்பாகப் புணரும்.
ஏற்புழிக்கோடல் என்பதனான் ‘கோ’ நிலைமொழி எனக் கொள்க.
 

எ.டு :கோவில் எனவரும். கோயில் எனவும் வரும் கோயில்=அரசனது
இல்லம் என்பது பொருள்.