சூ. 294 :

உருபியல் நிலையும் மொழியுமா ருளவே

ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும் 

(92)
 

க-து :
 

ஓகார   ஈற்றுச்சொல்  சில,  உருபியலிற்  கூறிய   விதிபெறும்
என்கின்றது.
 

பொருள் :ஓகார  ஈற்றுச்  சொற்களுள்  உருபு  புணர்ச்சிக்கு  ஓதிய
இலக்கணத்தான் நிலைபெறும் சொற்களும் உள. அவ்விடத்து வல்லெழுத்து
மிகாது இயல்பாகும்.
 

எ.டு :கோஒன்கை,  செவி,  தலை, புறம் எனவரும். ஏனைய வந்துழிக்
கண்டு கொள்க.