க-து:
பொருள் :மேற்கூறிய ஞகர ஈற்றுத் தொழிற்பெயர், வன்கணமேயன்றிஞநமவ என்பவற்றை முதலாக உடைய சொற்கள் வந்து இயையினும் உகரம்வந்து நிலைபெறும்.
எ. டு:உரிஞு ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும்; ஞாற்சி,நீட்சி, மாட்சி, வன்மை எனவும் வரும். யகரத்தொடும் உயிர்க்கணத்தொடும்புணருமாறு தொகைமரபினுள் பெறப்படுதலின் ‘ஞநமவ’ எனவிதந்துகூறினார்.