க-து :
பொருள் :நகர ஈற்றுச் சொல்லிறுதியும் மேற்கூறிய ஞகர ஈற்றுவிதியொடு ஒருதன்மைத்தாம்.
என்றது; உகரம் பெறுதலும், கசதபக்கள் வரின் மிகுதலும், ஞநமவக்கள்வரின் மிகாது இயல்பாதலும் ஆம்: வேற்றுமைக்கு விதி மேல் விதந்துகூறுதலின் இஃது அல்வழிக் கென்பது பெறப்படும்.
எ.டு : பொருநுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும், ஞான்றது, நீண்டது,மாண்டது, வலிது எனவும் வரும். ‘வெரிந்’ என்பதனொடும் இவ்வாறேகூட்டுக.