க-து:
பொருள் :மேற்கூறிய நகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்உகரம் கெட அகரம் வந்து நிலைபெறும்.
எ.டு :பொருநக் கடுமை, சிறுமை, தீமை, பெருமை என வரும்.‘‘உகரங்கெட’’ என்றதனான் ‘‘உயவல் யானை வெரிநுச் சென்றன்ன’’ எனஉகரம் கெடாது நிற்றலும் கொள்க.