சூ. 300 : | வெரிந்என் இறுதி முழுதுங் கெடுவழி |
| வருமிடன் உடைத்தே மெல்லெழுத் தியற்கை |
(5) |
க-து : | வெரிந் என்னும் பெயர்க்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. |
|
பொருள் : வெரிந் என்னும் சொல்லிறுதி மேற்கூறிய சாரியை எழுத்தொடு உடன்கெடுமிடத்து மெல்லெழுத்து வருதலாகிய இடனும் உடையதாகும். |
கெடும் என்பதற்கு இதுவே விதியாகக் கொள்ள வைப்பாராய்க் “கெடுவழி” என்றார். எனவே கெடுவழி என்பதற்குக், கெடும் கெட்டவழி எனப் பொருள் விரித்துக் கொள்க. |
எ.டு :வெரிங்குறை, வெரிஞ்சிறப்பு, வெரிந்தளர்ச்சி, வெரிம் பொலிவு எனவரும். |
‘இடனுடைத்தே’ என்றதனான் ‘வெயில் வெரி(ந்) நிறுத்த’ என மெல்லெழுத்து வரக் கெடுதலும், வெரிந்யாப்பு, வெரிந்உயர்ச்சி என யகரமும் உயிரும் வரும்வழிக் கெடாமையும் கொள்க. இன்னும் அதனானே வெரிநு ஞாற்சி, மாட்சி, வலிமை என இயல்புகணத்து உகரம் பெற்று வருதலும் கொள்க. வெரிந் = முதுகு. |