சூ. 301 :ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே(6)
 
க-து:இதுவுமது.
  

பொருள் :மேற்கூறிய   வெரிந்  என்னும்  சொல்   இறுதி  முழுதுங்
கெட்டவிடத்து   மெல்லெழுத்தேயன்றி   வல்லெழுத்து  மிகுதலும் அதற்கு
உரித்தாகும்.
 

எ. டு:வெரிக்குறை,  சுழி,  தோல், பொலிவு எனவரும். இஃது அருகிய
வழக்காகலின் உம்மை இழிவு தோன்ற நின்றது.