சூ. 304 :ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே(9)
 

க-து:

ஆண் என்னும் மரப் பெயர்க்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள்:‘ஆண்’ என்னும் மரத்தை உணர்த்தும் சொல் அரை என்னும்
மரப்பெயரியல்பிற்றாய் அம்முச்சாரியை பெற்றுப் புணரும்.
 

எ. டு:ஆணங்கோடு, செதிள், தோல், பூ எனவரும்.
 

சாரியைப்பேறு   வருமொழி    வரையாது    கூறினமையின்   இயல்பு
கணத்துங்கொள்க.    அவ்வழிச்    சாரியை   மகரம்   (சூ. 310)   பொது
விதியாற்கெடுமென  அறிக.  எ.டு:  ஆணநார்,  ஆணவேர்,  ஆணவெழில்
எனவரும்.