சூ. 305 : | விண்ணென வரூஉம் காயப் பெயர்வயின் |
| உண்மையும் உரித்தே அத்தென் சாரியை |
| செய்யுள் மருங்கின் தொழில்வரு காலை |
(10) |
க-து: | விண் என்னும் சொற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள் : விண் ணென்னும் குறிப்பன்றி ஆகாயத்தை உணர்த்தி வரும் சொல்லின்கண், செய்யுள் வழக்கிடத்து அத்து என்னும் சாரியை உளதாதலும் உரியதாகும். |
செஞ்சுடரின் வெப்பத்தால் காய்கின்ற இடமாதலின் (காய்+அம்) விண்வெளிக்குக் காயம் என்பது காரணப் பெயர். அஃது வியப்பையும் பரப்பையும் உணர்த்தும் ஆ என்னும் உரிச்சொல்லொடு கூடி ‘‘ஆகாயம்’’ என வழங்கும். இது தமிழ்ச்சொல். |
எ. டு: விண்ணத்துக் கொட்கும், சுழலும், திரியும், பரவும் எனவரும். ஏனைக்கணத்தும் விண்ணத்து நிலவும், வளரும், இயங்கும் எனவரும். |