|
சூ. 308 : | வேற்றுமை யல்வழி எண்ணென் உணவுப்பெயர் | | வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்தே | (13) | க-து : | எண்(எள்) என்னும் பெயர்க்காவதோர் மரபு கூறுகின்றது. | | பொருள் :எண் என்னும் உணவுப்பொருளை உணர்த்தும் பெயர், அல்வழியாற் புணருமிடத்து வேற்றுமைக்குரிய இலக்கணத்தொடு நிற்றலும் உரித்தாகும். | எ. டு:எட்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். உம்மையால் எண் கடிது என இயல்பாக வருதலும் ஆம். |
|