|
சூ. 313 : | இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே | (18) | | | க - து: | மகரஈற்று மரப்பெயர் ஒன்றற்குச் சாரியை கூறுகின்றது. | | பொருள் :உறையுமிடத்தை உணர்த்தாமல் மரத்தை உணர்த்தி வரும் இல்லம் என்னும் பெயர், விசை என்னும் மரப்பெயர்க்கு ஓதிய இலக்கணத்ததாய் மெல்லெழுத்து மிக்குப் புணரும். | எ. டு :இல்லங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். |
|