சூ. 319 :அளவும் நிறையும் வேற்றுமை இயல(24)
 

க-து :

அச்சொல் அளவைப் பெயர்களொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் : மேற்கூறிய   ஆயிரம்   என்னும்    சொல்    தனித்தும்
அடையடுத்தும்     நின்று    அளவுப்   பெயரும் நிறைப்பெயரும் வரின்
வேற்றுமைக்கோதிய இயல்பினதாய்ப் புணரும்.
 

அஃதாவது;   “துவரக்   கெட்டு   வல்லெழுத்து   மிகுமே”  (சூ. 310)
‘‘மெல்லெழுத்   துறழும்  மொழியுமா  ருளவே’’  (சூ. 312)  எனக்  கூறிய
விதிகளாற் புணரும் என்றவாறு.
 

எ. டு:ஆயிரம் - பதினாயிரம்  என நிறுத்திக் கலம் முதலாய அளவுப்
பெயர்களையும்   கழஞ்சு  முதலாய   நிறைப்பெயர்களையும்  கொணர்ந்து
ஆயிரக்கலம்,  ஆயிரச்சாடி,   ஆயிரத்தூதை,  ஆயிரப்பானை   எனவும்,
ஆயிரநாழி,   ஆயிரவட்டி    எனவும்,    ஆயிரங்கலம்,   ஆயிரஞ்சாடி,
ஆயிரந்தூதை,     ஆயிரம்பானை    எனவும்      வல்லெழுத்துமிக்கும்,
மெல்லெழுத்து  உறழ்வுமாக  வருமாறு கண்டு  கொள்க. நிறைப்பெயர்க்கும்
இவ்வாறே   ஆயிரக்கழஞ்சு;   ஆயிரங்கழஞ்சு,   தொடி,  துலாம்  எனக்
கொணர்ந்து கூட்டிக் கண்டு கொள்க.