|
சூ. 324 : | உயர்திணை யாயின் உருபியல் நிலையும் | (29) | | க-து: | எல்லாம் என்னும் பொதுப்பெயர் உயர்திணையாய் நின்று இருவழியும் புணருமாறு கூறுகின்றது. | | பொருள் :எல்லாம் என்னும் பொதுப்பெயர் உயர்திணைப் பொருட்டாய் வருமாயின் இருவழியும் உருபு புணர்ச்சிக்கு ஓதிய இயல்பிற்றாய் நிற்கும். வேற்றுமை யல்வழிச்சாரியை நிலைபெறாது. இருவழியும் என்பதும், வேற்றுமை யல்வழிச்சாரியை நிலையாது என்பதும் அதிகாரத்தாற் பெறப்பட்டன. | உருபியல் நிலையலாவது: ‘உயர்திணை யாயின் நம்மிடை வருமே’ என்ற இலக்கணம் பெற்று நிற்றலாம். |
எ.டு :வேற்றுமைக்கண்: எல்லாநங்கையும், செவியும், தலையும், புறமும் எனவரும். கை முதலியவை உயர்திணை உறுப்புக்கள் என்பதனை நம்முச்சாரியை தெளிவுபடுத்தி நின்றது. ஏனைக் கணங்களொடும் ஒட்டிக் கொள்க. | இனி அல்வழிக்கண்: எல்லாக் குறியேமும் எல்லாச் சிறியேமும், எல்லாத் தீயேமும், எல்லாப் பெரியேமும் என வரும். ஏனைக் கணங்களொடும் ஒட்டுக. ‘எல்லாம்’ எனும் பொதுப்பெயர் உயர்திணைக்கண் தன்மையிடத்தல்லது ஏனையிடத்து வாராது என்பது பெயரியலுட் பெறப்படும். |
|