சூ. 329 : | வேற்றுமை யாயின் ஏனை யிரண்டும் |
| தோற்றம் வேண்டும் அக்கென் சாரியை |
(34) |
க-து: | மேற்கூறியவற்றுள் இரண்டற்கு வேற்றுமைக்கண் சிறப்புவிதி கூறுகின்றது. |
|
பொருள் : வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின் மேல் நின்ற ஈம், கம் என்னும் இரண்டும் அக்கு என்னும் சாரியையொடு தோன்றி வரும். |
எ. டு:ஈமக்குடம்; கம்மக்குடம், சாடி, தூதை, பானை எனவரும். ஏனைக் கணங்களொடும் ஒட்டிக் கொள்க. |
ஏற்புழிக்கோடல் என்பதனான் ஏனையிரண்டும் என்றது ஈமும் கம்மும் எனக் கொள்க. ‘‘மேனை’’ இரண்டும் எனப் பாடம் இருத்தல் வேண்டும் எனக்கருத வேண்டியுளது. மேனை மேல்நின்றவை. அஃதாவது முதற்கண் நின்ற ஈமும் கம்மும் என்பது இப்பாடத்தின் பொருளாம். |