சூ. 332 :

னகார இறுதி வல்லெழுத் தியையின்

றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே 

(37)
 

க-து:

னகர ஈற்று வேற்றுமைப் புணர்ச்சியாமாறு கூறுகின்றது.
 

பொருள் : பெயர்    இறுதியாகிய    னகரஒற்று,      வருமொழியாக
வல்லெழுத்து  வந்து  புணரின்   வேற்றுமைப்   புணர்ச்சிக்கண்   திரிந்து
றகரமாகும்.
 

எ - டு :  பொற்குடம், சாடி, தூதை, பானை எனவும் தற்பகை எனவும்
வரும்.