சூ. 335 :குயினென் கிளவி இயற்கை யாகும்
(40)
 

க - து:

குயின் என்னும் சொற்கு எய்தியது விலக்குகின்றது.
 

பொருள் :  குயின்    என்னும்      பல    பொருளொரு    சொல்
வல்லெழுத்தியையின் திரியாது இயல்பாகும்.
 

எ. டு: குயின்,   குழாம்,   செலவு,   தோற்றம்,  பறைவு   எனவரும்
(குயின்-வெண்முகில்) குயின் குறுமை, சிறுமை, தீமை,  பெருமை எனவரும்.
(குயின்-குயிலுதல்-துளைத்தல் என்னும் தொழிற்பெயர்).
 

ஒரு    சிறுகுறிப்பு :  இந்நூற்பாவினை   அடுத்துத் ‘‘தொழிற்   பெய
ரெல்லாம்    தொழிற்பெய   ரியல’’   என்றொரு     நூற்பா    இருந்து
கெட்டிருத்தல் வேண்டுமெனத் தெரிகின்றது. என்னை?
 

முன்னர்  ஞ ந ண ம என்னும்  ஈறுகட்கும்  பின்னர் ல  ள  என்னும்
ஈறுகட்கும்  தொழிற்பெயர்    விதி   விதந்து   கூறப்பட்டிருத்த   லானும்
‘மின்னும்       பின்னும்     பன்னும்   ......   தொழிற்பெய      ரியல’
(சூ. 345.)  என   இவற்றை    இவ்வீற்றுத்   தொழிற்பெயர்   விதியொடு
மாட்டேற்றிக்   கூறுதலானும்,  தின்,  துன்,  முன்,  பின் என முதனிலைத்
தொழிற் பெயர்கள் பல உளவாகலானும் என்க.