சூ. 336 :எகின்மர மாயின் ஆண்மர இயற்றே
(41)
 

க - து:

னகர ஈற்று மரப்பெயர் ஒன்றற்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் :எகின் என்னும் சொல் மரப்பெயராகவரின்  ஆண் என்னும்
மரப்பெயரியல்பிற்றாய் அம்முச்சாரியை பெற்று வரும்.
 

எ.டு :எகினங்கோடு, செதிள், தோல், பூ எனவரும்.