எ. டு: எயின்குடி, சேரி, தோட்டம் எனவரும். ‘‘கொளத்திரிபிலவே’’ என்றதனான் எயினக்கன்னி, எயினப்பிள்ளை என அக்கும் வல்லெழுத்தும் பெற்று வருதலும், பார்ப்பனச்சேரி என ஈற்றயல் குறுகி அவ்வாறு வருதலும், கொல்லச்சேரி என ஈறு கெட்டு அவ்வாறு வருதலும், எயின ஞாற்சி, வாழ்வு என ஏனைக் கணத்து அக்குப்பெற்று இயல்பாக வருதலும் கொள்க. |