பொருள் : மீன் என்னும் சொல் வல்லெழுத்துவரின் இயல்பும் திரிபுமாக உறழ்ந்து வரும்.
எ. டு: மீன்கண் - மீற்கண்; மீன்செவி - மீற்செவி, தலை, புறம் எனவரும். உடூவின் பெயராகிய விண்மீன் என்பதே முதற் குறையாய் மீன் எனச் சிறுபான்மையாக வழங்கலின் அதற்கு இவ்விதி பொருந்தாதென்க. அது மீன்கணம், மீன்செறிவு, தோற்றம், பொலிவு என இயல்பாயே வரும்.