தேன் என்னும் சொல் வல்லெழுத்தொடு புணருமாறு கூறுகின்றது.
பொருள் : தேன் என்னும் சொல், வல்லெழுத்து வந்து புணரின் மேற் கூறியாங்கு உறழ்தலும், மிகுதலும் ஆகிய அம்முறை இரண்டும் உரிமையுடையதாகும். அங்ஙனம் வல்லெழுத்து மிகுங்கால் னகர இறுதி கெடும்.
எ. டு: தேன்குடம் - தேற்குடம் எனவரும். சாடி, தூதை, பானை என ஒட்டிக் கொள்க. தேக்குழம்பு, சிதைவு, தெளிவு, பாளிதம் எனவரும். மிகுதலும் என்னும் உம்மை எதிர் மறை. அதனான் தேன்குழம்பு, தேன்சிதைவு, தேன்துளி, தேன்பாகு என இயல்பாதலே வலியுடைத்தென்க.