சூ. 341 :மெல்லெழுத்து மிகினும் மான மில்லை
(46)
 

க - து:

தேன்  என்னும்    சொற்கு     எய்தியதன்மேற்   சிறப்புவிதி
கூறுகின்றது.
 

பொருள் :   தேன்   என்னும்   சொல்   வல்லெழுத்து   இயையின்
மிகுதலேயன்றி மெல்லெழுத்து மிக்குப்புணரினும் குற்றமில்லை.
 

எ.டு :  தேங்குழம்பு, தேஞ்சாடி, தூதை, பானை எனவரும். னகரக்கேடு
அதிகாரத்தாற் கொள்க.