சூ. 342 :மெல்லெழுத் தியையின் மிகுதியொடு உறழும்
(47)
 

க-து:

அது மெல்லெழுத்தொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :  தேன்  என்னும்  சொல்  மெல்லெழுத்து  வந்து புணரின்
மெல்லெழுத்து மிகுதலொடு மிகாமையுமாக உறழும்.
 

எ.டு :  தேஞ்ஞெரி  -  தேஞெரி, தேந்நுரை  - தேநுரை, தேம்மலர் -
தேமலர் எனவரும். னகரம் அதிகாரத்தாற் கெட்டது.
 

உரையாசிரியன்மார்   ‘இறுதியொடு  உறழும்’  எனப்பாடங்  கொள்வர்.
அஃது மெல்லெழுத்து என்னும் எழுவாயொடு  இயையாமையான் அப்பாடம்
பொருந்தாமை புலனாம்.