சூ. 344 :ஒற்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்தே
(49)
 

க-து:

இறாஅல்    தோற்றத்தின்கண்    எய்தியதன்மேற்  சிறப்புவிதி
கூறுகின்றது.
 

பொருள் :  தேன் என்னும் சொல் இறால் என்னும் சொல் வருமிடத்து
இரட்டித்த தகர ஒற்றொடு நிற்றலும் உரித்தாகும். தகரம் மிகும் என்றதனான்
னகரக்கேடு தானே பெறப்படும். ஒற்றுமிகு தகரம் என்றதனான் இரட்டித்தல்
புலனாகும்.
 

எ.டு:தேன்+இறால் = தேத்திறால் எனவரும். உம்மை எச்சவும்மை.
 

ஒற்றுமிகுதகரம்  இறால்   தோற்றத்திற்கேயாகலான்    ஏனை   உயிர்
முதன்மொழிவரின்   தேனடை,     தேனாறு,   தேனீ,  தேனுணா  எனப்
பொதுவிதியாற்  புணருமென்க.  தேத்தடை, தேத்தீ  என்பவை  சான்றோர்
வழக்காயின் புறனடையாற் கொள்க.
 

இவ்விரண்டு    சூத்திரங்களையும்   ஒன்றாக    ஓதின்   னகரக்கேடு
பெறப்படாதென்க.