க-து:
பொருள் : மேற்கூறிய இயற்பெயர்கள் சிறப்பாகிய அடையொடு கூடிநின்றவழித் திரிபின்றிப் புணரும்.
‘இயற்கையாகும்’ எனப் பொதுப்படக் கூறினமையின் வருமொழியாகியதந்தை என்னும் சொல்லும் திரிபுறாது இயல்பாக வரும் எனக் கொள்க.
எ - டு: நெடுஞ்சாத்தன் தந்தை, பெருங்கொற்றன் தந்தைகருங்குழலாதன் தந்தை, கணியன்பூதன்தந்தை, ஆதன்தந்தை, பூதன்தந்தை எனவரும்.