சூ. 351 :

தானும் பேனும் கோனும் என்னும்

ஆமுறை இயற்பெயர் திரிபிட னிலவே

(56)
 

க-து:

னகார ஈற்றுப் பெயர் சிலவற்றிற்கு எய்தியது விலக்குகின்றது.
 

பொருள் :  தான்,  பேன்,  கோன்  என்னும் ஆகிவரும் முறைமையை
உடைய இயற்பெயர்கள் திரிதல் இலவாம்.
 

எ - டு:  தான்றந்தை,  கோன்றந்தை  எனவும்  தான் கொற்றன், பேன்
கொற்றன், கோன் கொற்றன் எனவும் வரும்.
 

தாயன், பேயன்,  கோவன்  என்னும் சொற்களே  இடைக்  குறையாய்த்
தான், பேன்,  கோன் என  வழங்குதல் நோக்கி ‘‘ஆம் முறை இயற்பெயர்’’
என்றார்.   தான்தந்தை-தான்   என்பானின்  தந்தை.  தான்கொற்றன்-தான்
என்பானின்  மகனாகிய  கொற்றன் எனப்பொருள்   கொள்க.  ஏனையவும்
அன்ன.