சூ. 352 :தான்யான் எனும்பெயர் உருபியல் நிலையும்
(57)
 

க-து:

தான்யான் என்பவை திரிந்துபுணரும் என்கின்றது.
 

பொருள் :  தான் என்னும்  படர்க்கைப்  பெயரும்   யான்  என்னும்
தன்மைப்  பெயரும்  உருபுபுணர்ச்சிக்கு ஓதியவாறு  வேற்றுமைப் பொருட்
புணர்ச்சிக்கண் நின்று புணரும்.
 

அஃதாவது தான் என்பது நெடுமுதல் குறுகியும், யான் என்பது ஆகாரம்
எகரமாய் யகரமெய் கெட்டும், நிற்கும் என்றவாறு.
 

எ - டு:  தன்கை; என்கை, செவி, தலை, புறம் எனவரும். ஞாண், நூல்,
மணி, வட்டு, அணி என்பனவற்றொடும் கூட்டிக் கண்டுகொள்க.