வேற்றுமை யல்வழிக் குறுகலும் திரிதலும்
தோற்ற மில்லை என்மனார் புலவர்
க-து:
பொருள் : அதிகாரத்தான் நிற்கும் தான்யான் என்னும் பெயர்கள்அல்வழியாற் புணருமிடத்து நெடுமுதல் குறுகலும் திரிதலுமின்றி இயல்பாகப்புணரும்.
எ - டு: தான் குறியன், சிறியன், தீயன், பெரியன் எனவும் யான்குறியேன், சிறியேன், தீயேன், பெரியேன் எனவும் வரும்.
‘தோற்றம்’ என்றதனான் - வேற்றுமைக்கண் தற்புகழ், எற்புகழ் எனனகரந் திரிதலும் கொள்க என்பார் உரையாளர். மாட்டேறு முதனிற்கும்எழுத்துப் பற்றியதாகலின் னகரத் திரிபு பொதுவிதியாற் பெறப்படுமென்க.