சூ. 354 :அழன்என் இறுதிகெட வல்லெழுத்து மிகுமே
(59)
 

க-து:

அழன் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் அழன் என்னும்  சொல்லிறுதி னகரஒற்றுக்கெட வருமொழி
வல்லெழுத்துமிக்குப் புணரும்.
 

எ - டு:   அழக்குடம்,    சாடி,     தூதை,    பானை  எனவரும்.
உருபுபுணர்ச்சிக்கு  ஓதியாங்கு அத்துச்சாரியை பெறுமோ என வரும் ஐயம்
நீங்க வல்லெழுத்துமிகும் என்றார்.