யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின்
வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே
க.து:
பொருள்: யகர ஈற்றுப் பெயர்கள் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்வல்லெழுத்து வந்து இயையின் அவ்வல்லெழுத்து மிக்குப் புணரும்.
எ - டு: நாய்க்கால்; பேய்க்கால், செவி, தலை, புறம் எனவரும்.