சூ. 358 :தாய்என் கிளவி இயற்கை யாகும்
(63)
 

க-து:

தாய் என்னும் பெயர்க்கு மேல் எய்தியது விலக்குகின்றது.
 

பொருள் : தாய் என்னும்  முறைப்பெயர்ச்சொல் வல்லெழுத்து வரின்
மிகாது இயல்பாகும்.
 

எ - டு: தாய்கை, செவி, தலை, புறம் எனவரும்.