க-து:
பொருள் : யகரஈற்றுப் பெயர் எல்லாம் அல்வழிக்கண் இயல்பாகப்புணரும் என்று கூறுவர் புலவர்.
எ - டு: நாய் குறிது, சிறிது, தீது, பெரிது எனவரும். ‘எல்லாம்‘என்றதனான் தாய்ச்சென்றான், போய்ப்பெற்றான் என வினையெச்சத்தின்கண்ணும் பொய்ச்சொல், மெய்ப்பொருள் என இருபெயரொட்டின் கண்ணும்மிகுதல் கொள்க.