சூ. 364 :சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும்
(69)
 

க-து:

சார் என்னும் சொற்கு ஒருவழி எய்தியது விலக்குகின்றது.
 

பொருள்:  சார்  என்னும்  சொல் காழ்  என்பதனொடு புணருமிடத்து
வல்லெழுத்துமிகும்.
 

எ - டு: சார்க்காழ் எனவரும் (காழ்-வித்து)