சூ. 365 :பீர்என் கிளவி அம்மொடுஞ் சிவணும்
(70)
 

க-து:

பீர் என்னும் சொற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் :  பீர்   என்னும்  சொல்   மெல்லெழுத்து  மிகுதலேயன்றி
அம்முச்சாரியையொடும் பொருந்திப்புணரும்.
 

எ - டு :  பீரங்கொடி,  செதிள்,  தோல்,  பூ  எனவரும்.  உம்மையை
எச்சமாக்கி  அதனொடு அத்து  வருதலும்  கொள்க. ‘‘மாரிப்பீரத்து அலர்’’
எனவரும்.