சூ. 366 :லகார இறுதி னகார இயற்றே
(71)
 

க-து:

லகார ஈற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாமாறு கூறுகின்றது.
 

பொருள் : லகார ஈற்றுப் பெயர், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்
னகார  ஈற்று  இயல்பிற்றாகும். அஃதாவது  வல்லெழுத்துவரின்  றகரமாகத்
திரியும் என்றவாறு.
 

எ - டு:  கற்குறை, சிறை,  தலை,  புறம் எனவும் கடற்கரை, கடற்சுழல்,
கடற்றிரை, கடற்படகு எனவும் வரும்.