சூ. 367 :மெல்லெழுத் தியையின் னகர மாகும்
(72)
 

க-து:

லகரஈறு மெல்லெழுத்தொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :  லகர  ஈற்றுச் சொற்கள்  வருமொழி மெல்லெழுத்து வரின்
னகரமாகத் திரியும்.
 

எ - டு: கன்ஞெரி,  கன்னுனி,   கன்முரி,   கடன்ஞாலம்,   கடன்மா
எனவரும்.