எ - டு: கல்குறிது - கற்குறிது, சிறிது, தீது, பெரிது என வரும். மொழியாததனையும் முட்டின்று முடித்தல் என்னும் உத்தியான் மென்கணம்வரின் னகரமாகத் திரியுமெனக் கொள்க. எ - டு:கன் ஞெரிந்தது, நீண்டது, மாண்டது, விரன்மெலிந்தது எனவரும். |
‘எல்லாம்’ என்றதனான் கூறுமாற் சிறிதே, வந்தானாற் கொற்றன் என அசையிடைச் சொல்லின் லகரம் உறழாது திரிந்தே வருதல் கொள்க. உரையாளர் அத்தாற் கொண்டான், இத்தாற் கொண்டான் எனத் திரிந்ததெனக் காட்டுவர். அவை அதனான், இதனான் என்னும் னகர ஈற்றுச் சொற்களாதலின் ஈண்டைக்கு எய்தா என்க. |