தகரம் வரும்வழி ஆய்தம் நிலையலும்
புகரின் றென்மனார் புலமை யோரே
க-து:
பொருள் : லகர ஈற்றுச் சொல் வருமொழி தகரமாகியவிடத்துஆய்தமாகத்திரிந்து நிற்றலும் குற்றமின்றென்பார். உம்மை இறந்தது தழீஇயஎச்ச உம்மை.
எ - டு: கல் + தீது = கஃறீது, அஃறிணை எனவரும்.
வருமொழித்திரிபு தொகைமரபினுட் பெறப்படும் (தொகை-8) பஃறாழிசை,பஃறொடை என விதியீறாகி நின்ற லகரத்திற்கும் இவ்விதி ஒக்கும். ஏற்புழிக்கோடல் என்பதனான் இத்திரிபு குறில் வழிநின்ற லகரத்திற்கேயாகும் எனஅறிக.