சூ. 370 :நெடியதன் இறுதி இயல்புமா ருளவே
(75)
 

க-து:

ஒருசார் லகர ஈற்றுச் சொற்கள் இயல்பாகும் என்கின்றது.
 

பொருள் :  நெட்டெழுத்தின்  பின்நின்ற  லகர   இறுதிச்   சொற்கள்
திரிபின்றி இயல்பாதலும் உளவாம்.
 

எ - டு:   கால்குறிது, பால்சிறிது, நூல்பெரிது எனவும் புலால் கொடிது,
வரால்  பெரிது   எனவும்  வரும். தகரம்  வருவழி, வராறீது, வேறீது என
லகரம் கெடுதல்  தொகைமரபினுள்  (தொகை-78) பெறப்படும். உம்மையான்
திரிந்து வருவன உளவேல் கண்டு கொள்க. மேற்கோள், மேற்பார்வை எனக்
காட்டலுமாம்.