|
சூ. 371 : | நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் | | அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல | (76) | க-து: | ஒருசார் லகர ஈற்றுப் பெயர்கள் அல்வழியினும் திரியுமென்கின்றது. | பொருள் : நெல், செல், கொல், சொல் என்னும் நான்கு பெயர்களும், அல்வழியாற், சொல்லுமிடத்தும் வேற்றுமைக்கு ஓதிய இயல்பினவாய் லகரம் றகரமாகத் திரியும். | எ - டு: நெற்குவிந்தது - செற்கிளர்ந்தது; கொற்கடிது - சொற்கடிது, சிறிது, தீது, பெரிது என ஒட்டிக் கொள்க. (செல் - மேகம்; கொல்-கொல்லத்தொழில்; சொல்-மொழி, நெல்) |
|