சூ. 374 : | நாயும் பலகையும் வரூஉங் காலை |
| ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே |
| உகரங் கெடுவழி அகரம் நிலையும் |
(79) |
க-து: | வல்லென்னும் சொற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள் : மேற்கூறிய வல்லென்னும் சொன்முன்னர் நாய், பலகை என்னும் சொற்கள் வந்துபுணரின், அவ்விடத்து மேற்கூறிய உகரங் கெடுதலும் உரித்தாகும். உகரம் கெடுமிடத்து ஆண்டு அகரம் வந்து நிலைபெறும். |
எ - டு: வல்லநாய், வல்லப்பலகை எனவரும். உம்மையான் வல்லுநாய், வல்லுப் பலகை எனவும் வரும். நாய் என்பது சூதுஆடும் கருவியாகிய காய்களை. இவை வல்லினுள் நாய் எனவும் வல்லுக்குரிய பலகை எனவும் விரியும். |