சூ. 380 :மெல்லெழுத் தியையின் அவ்வெழுத் தாகும்  
(85)
 

க-து:

சுட்டுவகரஈறு மெல்லெழுத்தொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :  வகர ஈற்றுச் சுட்டுப் பெயர் மெல்லெழுத்தொடு இயையின்
வந்த மெல்லெழுத்தாகத் திரியும்.
 

எ - டு:  அஞ்ஞாண்கள்,  அந்நூல்கள்,  அம்மலர்கள்   என  வரும்.
நிலைமொழி,  பன்மைச்  சொல் என்பது  விளங்க  வருமொழி ஈற்றின்கண்
கள்விகுதி  கூட்டிக்கூறுதல் தகவுடைத்தென்க. என்னை? அ, இ, உ என்னும்
சுட்டுக்களொடு  மெல்லெழுத்துப்  புணரினும்  அவையும் அந்நூல்  என்றே
வருமாதலின் என்க.