சூ. 381 :ஏனவை புணரின் இயல்பென மொழிப
(86)
 

க-து:

சுட்டு  வகர  ஈறு  இடைக்கணத்தொடும்   உயிர்க்கணத்தொடும்
புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :  வகர   ஈற்றுச்    சுட்டுப்    பெயர்கள்  வல்லெழுத்தும்
மெல்லெழுத்தும்    அல்லாத   ஏனைய   இடைக்கணத்தொடும்   உயிர்க்
கணத்தொடும் புணரின் திரிபின்றி இயல்பாகும் என்று கூறுவர் புலவர்.
 

எ - டு:  அவ்யாழ்கள்,   இவ்யாழ்கள்,  உவ்யாழ்கள்,  அவ்வட்டுக்கள்,
அவ்வணிகள் எனவரும். ஏனையவற்றொடும் ஒட்டிக் கொள்க.