சூ. 386 :குமிழ்என் கிளவி மரப்பெய ராயின் 
பீரென் கிளவியொடு ஓரியற் றாகும்
(91)
 

க-து:

குமிழ் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் : குமிழ் என்னும் சொல் தொழிற் பெயரன்றி மரப்பெயராயின்
பீர்    என்னும்   சொல்லொடு   ஒத்த   இயல்பிற்றாய் மெல்லெழுத்தும்,
அம்முச்சாரியையும் பெற்றுப்புணரும்.
 

எ - டு: குமிழ்ங்கோடு - குமிழங்கோடு, செதிள், தோல், பூ எனவரும்.
 

‘‘ஓரியற்று’’  என்றதனான்   மகிழ்  என்னும்  மரப்பெயர்க்கும் இவ்விதி
கொள்க. மகிழ்ங்கோடு - மகிழங்கோடு எனவரும்.