சூ. 387 :பாழ்என் கிளவி மெல்லெழுத் துறழ்வே 
(92)
 

க-து:

பாழ் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள்:  பாழ்  என்னும் பண்புப்பெயர் மெல்லெழுத்தொடு உறழ்ந்து
வரும்.
 

எ - டு:  பாழ்க்கிணறு  -  பாழ்ங்கிணறு, சேரி,  தோட்டம்,  படப்பை
எனவரும்.    பாழ்ங்கிணறு    என்பதைப்  பாழினுட் கிணறு  என ஏழாம்
வேற்றுமைப் பொருள்பட   விரிப்பார்  நச்சினார்க்கினியர். அஃதொவ்வாது
பாழினை உற்றகிணறு என இரண்டாவது விரித்தலே சால்பென்க.