சூ. 388 :ஏழென் கிளவி உருபியல் நிலையும் 
(93)
 

க-து:

ஏழ் என்னும் சொல் அன்சாரியை பெறுமென்கின்றது.
 

பொருள்:  ஏழ்   என்னும்   எண்ணுப்பெயர்   பொருட்பெயர்களொடு
புணருங்கால் உருபுபுணர்ச்சிக்கு ஓதியாங்கு அன்சாரியை பெற்று நிற்கும்.
 

எ - டு:   ஏழன்காயம்,   சுக்கு,  தோரை,  பயறு எனவரும். ஏழனாற்
கொண்ட (ஏழுகாசுகளாற் கொண்ட) காயம் எனவிரியும்.