சூ. 391 :ஆயிரம் வருவழி உகரங் கெடுமே 
(96)
 

க-து:

ஏழு   என்னும்     திரிபுற்றசொல்    ஆயிரம்    வருமிடத்து
இயல்பாகுமென்கின்றது.
 

பொருள் :  ஏழு  என  விதியீறாய்   நின்றசொல்லின்முன்  ஆயிரம்
என்னும் எண்ணுப் பெயர்வரின் உகரம் கெடும்.
 

எழு  என்பதன்கண்  உகரம்  கெட்ட வழி ‘ழ’கர ஈறு குறிற்கீழ் ஒற்றாக
நிற்றற்கு  ஏலாமையான்  முதல்  நீளும்  என்பது உய்த்துணரப்படுமாதலின்
எடுத்துக் கூறாராயினர் என அறிக.
 

எ - டு:  எழு (ஏழ்) + ஆயிரம் - ஏழாயிரம் எனவரும்.